போதையில் இருந்த பொலிஸாரே சுட்டனர்: மல்லாகம் சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

மல்லாகத்தில் நெற்று பொலிஸாரின் அத்துமீறிய தப்பாக்கி சம்பவத்தால் உயிரிழந்த இளைஞனுக்கும் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பொலிஸாருக்கும் இடையில் முன் விரோதம் இருந்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி குறித்த பொலிசார் போதையில் இருந்ததாகவும் சம்பவ இடத்திலிருந்து நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

அத்துடன் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் தன்னை வந்து தாக்கியதாகவும் தனது கையிலும் தலையிலும் வெட்டுக்கள் விழுந்ததாகவும் அதன் பின்னர் பொலிஸார் தன்னை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர் எனவும் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நிலையில் அதனை தடுப்பதற்காக தனது உறவினர் குறுக்கே மறித்த போதே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் யாரும் விசாரித்தால் நான் தான் சுட்டேன் என தெரிவிக்குமாறு ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாகவும் குறித்த பொலிஸ் அதிகாரியை தன்னால் அடையாளம் காட்ட முடியும் எனவும் அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முழுதும் பொலிஸாரே காரணமென்றும் ஆனால் இதனை ஆவா குழு செய்ததாக பொலிஸார் பரப்புரை செய்வது முற்றிலும் பொய் எனவும் அப்பகுதி மக்கள் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையில் யுத்த நிறைவுக்குப் பின்னர் தற்போது வாள்வெட்டு கொலை கொள்ளை கடத்தல் என பரவலாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

நல்லாட்சி அரசு அரியணையில் ஏறினால் நிம்மதி பெருமூச்சு விடலாம் என எதிர்பார்த்தவர்களுக்கு இது பேரிடியாகவே அமைந்துள்ளது. ஆனாலும் சிலர் யார் ஆட்சி செய்தாலும் இது தொடர்கதையாகிவரும் என்பதை கூறுவந்தனர்

கலாச்சாரங்கள் காணாமல் போகும் நிலை வந்து கொண்டிருக்கிறது. கஞ்சா ஹெரோயின் என்று அத்தனையும் தாராளமாக இருக்கிறது. கட்டுக்குள் கொண்டுவர அரசு முயற்சிக்காதோ என்று பலர் கேள்வியைக் கேட்கின்றனர்.

இந்த நிலையில் யாழ் மல்லாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

மல்லாகம் சந்திக்கு அருகாமையிலுள்ள சகாயமாதா கோவிலின் திருவிழா இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் குறித்த பகுதியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.வாள்வெட்டு நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பாக்கியராசா சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சகாயமாதா கோவிலின் திருவிழாவிற்கு சென்று விட்டு வீதியில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் இருசக்கர வாகனத்தில் வீதியில் வந்துகொண்டிருந்துள்ளார்.

அப்போது குறித்த இளைஞனை வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் குறித்த இளைஞனுக்கும் ஆவா குழுவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாது உயிரிழந்த இளைஞனுக்கும் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பொலிஸாருக்கும் இடையில் முன் விரோதம் இருந்துள்ளது.

அதுமட்டுமின்றி குறித்த பொலிசார் போதையில் இருந்ததாகவும் சம்பவ இடத்திலிருந்து நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் நேரில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்