யாழ்ப்பாணத்தின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடுவதில்லை – பிரித்தானியாவிடம் உறுதிபடத் தெரிவித்தார் ஆர்னோல்ட்!

யாழ்ப்பாணத்தின் சிவில் நிர்வாக விடயங்கள் எதிலும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பதில்லை என யாழ் மாநகர சபையின் முதல்வர் ஆர்னோல்ட் பிரித்தானிய உயரிஸ்தானிகரிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகர் ஜேம்ஸ் டவ்ரிஸ் யாழ். மாநகர சபைக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழ் மாநகர முதல்வரிடம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டள்ர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த முதல்வர் ஆர்னோல் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினருடைய நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றது என பிரித்தானிய உயரிஸ்தானிகர் தன்னிடம் கோரியதாகவும் அதற்கு தான் பதிலளிக்கும்போது

சிவில் பொலிஸாரின் செயற்பாடுகள் யாழ் குடாநாட்டிற்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரது செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்பட்டள்ளதுடன் அவர்கள் சிவில் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடுவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களது தேவைப்பாடுகள் பிரச்சிகைள் அனைத்தும் பொலிசாரின் மூலமாகவே நடைபெறுகின்றது. ஆனாலும் மக்களிடம் பிரச்சினை ஒன்றுதான் இருகிகின்றது. அது மொழிப்பிரச்சினை. இதனால் மக்கள் தமது பிரச்சினைகளை தெளிவாக எடுத்துச்சொல்ல முடியாதிருக்கின்றனர் என்றார்.

இதனிடையே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணத்தின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடகின்றது என்றும் இதனால் தமது செயற்பாடுகள் தடுக்கப்படகின்றது என்றும் கருத்து தெரிவித்தவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துவரும் நிலையில் ஆர்னோல்ட் இன்றையதினம் இராணுவம் தலையிடுவதில்லை என்று பிரித்தானிய உயரிஸ்தானிகரிடம்  தெரிவித்திருப்பதானது முதல்வர் பொய் சொல்லியுள்ளார் என்பதை எடுத்துக்காட்டுகினறது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடுவதில்லை – ஆர்னோல்ட்!

யாழ்ப்பாணத்தின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடுவதில்லை – பிரித்தானியாவிடம் உறுதிபடத் தெரிவித்தார் ஆர்னோல்ட்!

Posted by Jaffna News+ on Monday, June 18, 2018

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்