வவுனியாவில் வைத்தியர் எனும் போர்வையில் பாலியல் வன்முறை செய்த கஜவன் ; பெண் ஒருவர் முறைப்பாடு

நேற்றையதினம் (18.06) வவுனியாவில் உள்ள நெடும் குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில்; அமைந்துள்ள தனியார் மருத்தவமனையில் தனக்க வைத்தியர் ஒருவரினால் பாலியல் தொந்தரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் வைத்தியரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ;
குறித்த வைத்தியசாலையில் பணி புரியும் பெண்ணானவர் நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் மருத்துவமனைக்கு தினசரி நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை கொண்டு செல்வதனை வழமையாக கொண்டுள்ளார்.
அதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருத்துவ அறிக்கைகளை எடுத்து சென்ற குறித்த பெண்ணை அவ் மருத்துவமனையின் வைத்தியர் பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து நேற்று குறித்த பெண் சம்பவத்தினை பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதனையடுத்து நேற்று இரவு 10.00 மணியளவில் பெற்றோர் அப்பெண்ணை அழைத்து சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

குறித்த வைத்தியர் மீது முன்னரும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டுள்ளதாக பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்