ஆங்கில தின போட்டிகளில் குழப்பம் – திண்டாடிய மாணவர்கள் – அதிருப்தியில் தீவக கல்வி வலய ஆசிரியர்கள்!

ஒழுங்குபடுத்தலின் தெளிவின்மை காரணமாக  வலயமட்டத்தில் நடைபெற்ற ஆங்கில தின போட்டிகளில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்ட சம்பவமொன்று இன்றையதினம் தீவக வலயத்தில்  நடைபெற்றது.

இதுதொடர்பில் தெரியவருவதாவது –

தீவக வலய பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில குழுநிலை போட்டிகள் கடந்த வாரம் ஆரம்பமாகியிருந்தது. இதன் ஒரு அங்கமாக வலயமட்ட நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிவிப்பு வலயக்கல்வி அதிகாரிகளால் பாடசாலைகளுக்கும் அன்றி துறைசார் பொறுப்பாசிரியர்களும் சென்றடையாமையால்  பல பாடசாலைகளின் மாணவர்களும் பொறுப்பாசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் வலயக்கல்வி பணிப்பாளரது பொறுப்பற்ற தன்மை குறித்தும் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் பல பாடசாலை மாணவர்கள் ஏமாற்றமடைந்த  சம்பவமம் நடந்தேற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தின் கல்வித் தரம் படு பாதாளத்தில் இருக்கும் இன்றைய நிலையில் ஆங்கில்  பாடத்திற்குரிய போட்டிகள் அதுவுவும் மாணவர்களை ஆங்கில தின போட்டிகளில் பங்குபற்ற வைப்பதற்காக அரும்பாடுபட்டு உழைத்து ஒருவாறு அடைவு மட்டத்திற்கு இட்டுச்சென்ற ஆசிரியர்களுக்கு இன்றையதினம் குறித்த போட்டி நடைபெறவுள்ளது என அறிவிப்பு உரியமுறையில் தெரியப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று ஆசிரியர்களாலும் பெற்றோராலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான பொறுப்பற்ற வலயக்கல்விப்பணிமனையின் செயற்பாடானது தமது சுயநலன்களை முன்னிறுத்தியதாக அமைந்துள்ளதாகவும் புத்திஜீவிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்

கடந்த வாரமும் புனித றம்ழான் தினம் அனுஸ்டிக்கப்படுவது தெரிந்திருந்தும் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் திட்டமிடப்படாத செயற்பாடுகளினால் செயலமர்வு ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தமையும் அதன் பின்னர் அது நிறுத்தப்பட்டமையால் ஆசிரியர்கள் பெரும் குழப்ப நிலையடைந்த சம்பவமும் நடந்தேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்