யாழ்ப்பாணத்தில் இரவுநேர மாதர் அதிகரிப்பு – பின்னணியில் ஆட்டோ சாரதிகள்?

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பெண்கள் வாகனங்களில் மாறி மாறி அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதைப் பொலிஸாரும் கண்டும் காணாதது போன்று உள்ளனர் என்று மாநகர சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் பெண்கள் தொடர்பான நிலையியல் குழுவின் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதன்போதே அவர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டினர்.

அவர்கள் தெரிவித்ததாவது –

யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் உட்பட நகர்ப் புறங்களில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். யாழ்ப்பாணம் ஜே.109 கிராம அலுவலர் பிரிவில் பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்கள் 15 பேர் உள்ளனர் என்று கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. படிப்பை நிறுத்திய பெண்கள் எத்தனையோ பேர் வீட்டில் உள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க எமது சபையின் சிறப்புக் குழுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதிகளில் இரவு நேரத்தில் 8 மணி தொடக்கம் சுமார் 10 பெண்கள் ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதைப் பொலிஸார் கண்டும் காணாமல் இருக்கின்றனர். அவர்களும் இதற்கு உடந்தையா என்று சந்தேகம் தோன்றுகின்றது என்றனர்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்