சம்பந்தனை விரும்பாத தமிழ் M.P.க்கள் : டக்ளசுக்கு முதலமைச்சர் வழங்கிய வரவேற்பால் ஆடிப்போன கூட்டமைப்பு!

முதல்வர் விக்னேஸ்வரனின்ட “நீதியரசர் பேசுகின்றார்” நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தன் கலந்துகொண்டமையால் அதிருப்தியுற்ற தமிரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டிராமையானது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் முதல்வரால் அழைக்கப்பட்ட அரசியல்வாதிகள் கல்விமான்கள் புத்திஜீவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தபோதிலும் சரவணபவன்  சிறீதரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நூல் வெளியீட்டு நிகழ்வை புறக்கணித்துள்ளனர்.

இப்புறக்கணிப்பக்கு காரணம் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் பொருட்டு வருகைதந்திருந்த சம்பந்தனே காரணம் எனவும் இதனாலேயே குறித்த உறுப்பினர்கள் சிலர் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அரசல் புரசலாக பேசப்படுகிறது.

இந்நிலையில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் ஒரு புறத்திலும் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்னொரு புறத்திலும் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

அதுமாத்திரமன்று இவ்வாறு கூட்டமைப்புக்குள் அங்கம் அவகிக்கும் கட்சி பிரமுகர்கள் வெவ்வேறு இடங்களில் பிரிவு பிரிவாக உட்கார்ந்திருந்ததனூடாக கூட்டமைப்பிற்குள் இருக்கின்ற உட்கட்சி விரிசல்களை குறித்த நிகழ்வு வெளிக்காட்டியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதனிடையே முதல்வரின் அழைப்பை ஏற்று குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மண்டபத்திற்கு சென்ற சமயம் முதலமைச்சர் வழங்கிய வரவேற்பானது அங்கிருந்த தமிழ் தேசியக் கூட்டமைடப்பில் அங்கம் வகிக்கின்ற அனைவரின் வயிற்றிலும் புளியை கரைத்திருந்தமையை அவதானிக் முடிந்ததாக நிகழ்வில் பங்கெடுத்தோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்