126 ஓட்டங்கள் பெற்றது தென்னாபிரிக்கா

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாள் இன்றாகும்

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

திமுத் கருணாரத்ன 158 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.பந்துவீச்சில் ரபடா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.அதன் பின்னர் நேற்று தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்கா அணி இன்று சகல விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.பாப் டூ பிளஸிஸ் 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கட்டுக்களை வீழ்த்தியதோடு அணித்தலைவர் சுரங்க லக்மால் 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

இலங்கையணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு தென்னாபிரிக்காவினால் துடுப்பெடுத்hடுவது கஷ்டமாகவே இருந்தது.இலங்கையணி தனது இரண்டாவது இன்னிங்சில் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்