பெண்களுக்கான கல்வி மறுக்கப்படுவதால் உலக வங்கிக்கு ரூ.2,000 லட்சம் கோடி நட்டம்

பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதால் உலகம் முழுவதும் 15 லட்சம் கோடி டாலர் முதல் (ரூ.1,000 லட்சம் கோடி) 30 லட்சம் கோடி டாலர் (ரூ.2,000 லட்சம் கோடி) வரை இழப்பு ஏற்படுவதாக சர்வதேச வங்கி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில், பெண்கள் கல்விக்காகப் போராடி, சிறுமியாக இருக்கும்போது தலிபான் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்டு, பிறகு உயிர் பிழைத்தவர் மலாலாவை கௌரவிக்கும்
அவரது பிறந்தநாளான ஜூலை 12-ஆம் தேதியை மலாலா தினமாக’ ஐ.நா.கொண்டாடி வருகிறது கும். வகையில், அவரது பிறந்தநாளான ஜூலை 12-ஆம் தேதியை மலாலா தினமாக’ ஐ.நா.கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டு மலாலா தினத்தில் உலகவங்கிவிடுத்துள்ள அறிக்ககையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்ககையில் மேலும் தெரிவிக்கப்பட்டமை வருமாறு
குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவான சிறுமிகளே ஆரம்பப் பள்ளிகள் சேர்க்கப்படுகின்றனர். மேலும், மூன்றில் ஒரு சிறுமியே கீழ்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

12-ஆம் வகுப்பு வரை ஒரு பெண்ணுக்கு கல்வி அளிக்கத் தவறுவதால், மனிதவள மூலதன சொத்து மதிப்பில் இழப்பு ஏற்படுகிறது.
அந்த இழப்பு, உலகம் முழுவதும் 15 லட்சம் கோடி டாலர் முதல், 30 லட்சம் கோடி டாலர் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது குறித்த அறிக்கiயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்