மூலிகைகளை வளர்க்க சகல உதவிகளை செய்வதாக ராஜித சேனாரத்தன உறுதி

ஆயுர்வேத மூலிகைகளை வளர்ப்பதற்கு பயிரச்செய்கையார்களை ஊக்குவிக்க சகல உதவிகளையும் செய்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

 

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச சுதேச சுகாதார பராமரிப்பு கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்

இலங்கையில் பல்வேறு வளங்களை வைத்து கொண்டு அவற்றை சரியான முறையில் பயன்படுத்தாதுள்ளோம். இதனாலேயே இன்றும் எமது வளர்ச்சியில் வேகம் குறைவாக உள்ளது. இவற்றை நிவர்த்திக்கும் வகையிலான பல்வேறு திட்டங்கள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் இலங்கையில் சிறு கைத்தொழிலாளர்கள் மத்தியில் மூலிகை பயிர்ச்செய்கையை நாம் ஊக்குவிக்கின்றோம். இதற்காக அவர்களுக்கு வேண்டிய மூலிகை விதைகள், பயிரிட வேண்டிய நிலப்பரப்பு மற்றும் விற்பனைக்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்க தயாராகவுள்ளது.

இதற்கமைய நிகவரட்டி, மதவாச்சி, அநுராதபுரம் போன்ற இடங்களில் ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையங்களையும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆயுர்வேத ஸ்தாபனங்களையும் நாம் அதிகரித்து வருகின்றோம்.

மேலும் மருத்துவ சுற்றுலாத்துறையையும் அபிவிருத்தி செய்து சர்வதேச நாடுகளுடனும் நாம் கைகோர்க்க வேண்டிய நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில வருடங்களில் சுகாதர துறையில் பல்வேறு மாற்றங்களை காண்பதுடன் சர்வதேச தரத்திலான சுதேச வைத்தியத்துறைக்கும் காத்திரமான இடத்தை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்