உலகின் ஒரே ஒரு சர்வமத கேந்திரம் கதிர்காமமே!

வரலாற்றுச் சிறப்பு மிக்க ருகுணு மகா கதிர்காம தேவாலயத்தின் அசெல திருவிழா நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அசெல திருவிழா ஆரம்பிக்க முன்னர் புனிதப் பிரதேசத் துக்குள் காணப்படும் முஸ்லிம் பள்ளிவாயலில் கொடியேற்ற விழாவும் நேற்று  நடை பெற்றுள்ளது.

இந்த அசெல திருவிழா ஆரம்பிக்க முன்னர், பௌத்த, முஸ்லிம், இந்து மதங்களுக்குரிய மதத் தலைவர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் இணைந்து சம்பிரதாய நிகழ்வுகளில் ஈடுபடுவது வழமையாகும்

நாட்டிலுள்ள மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு காணப்பட்டது.

உலகிலுள்ள ஒரேயொரு சர்வ மத கேந்திர நிலையமான கதிர்காம புனித பிரதேசத்தில், பௌத்தர்களுக்கும், இந்து மற்றும் இஸ்லாம் சமயங்களின் பக்தர்களுக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்