நாளை பலவந்தமாக காணாமல் போனோருக்கான சர்வதேச தினம்

நாளைய தினம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினம் உலகெங்கிலும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

குறித்த தினத்தினை முன்னிட்டு இலங்கையில் காணாமல் போனோர் ; தொடர்பான அலுவலகம் விஷேட நிகழ்வொன்றை ஒழுங்கு செய்துள்ளது.

இது தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட பேரணி தாமரை தடாக சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி ஜே.ஆர். ஜயவர்த்தன கேந்திர நிலையம் வரை முன்னெடுக்கவுள்ளதுடன் ஷட உரைகளும் நிகழ்த்தப்படவுள்ளன.

இந்த நிகழ்வின் விஷேட அதிதிகளாக காணாமல் போனோரின் உறவினர்கள், பொது அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்