வடக்கு கிழக்கு மக்களுக்காக மாேடியிடம் 1 இலட்சம் கல்வீடுகளைக் கேட்ட டக்ளஸ் எம்.பி

41416254_551105738679060_5219106157720764416_n

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக யுத்த அழிவுகளுக்கு முகம் கொடுத்த தமிழ் மக்கள் பாதுகாப்புடனும், அரசியல் உரிமைகளுடனும் கௌரவமாமூன்று க வாழ்வதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவினருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்குமிடையே இன்று(10.09.2018) டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பின்போதே மேற்கண்டவாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கைவிடுத்தார்.

உத்தியேக பூர்வ பயணமாக இந்தியாவுக்கு சென்றுள்ள  டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இந்;தியப்பிரதமர் நரேந்திரமோடியுடனான உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,    இலங்கை அரசு கொண்டுவருவதாகக் கூறும் புதிய அரசியலமைப்பு ஒரு நிச்சயமற்ற தன்மையாகவே இருப்பதால் அதை உறுதிப்படுத்தவதற்கு காலதாமதம் ஆகலாம். ஆகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு நிலையான தீர்வை அடைந்து கொள்வதற்கு இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பயனாக அமையப்பெற்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்து முன்னோக்கிச் செல்வதே நடைமுறைச் சாத்தியமாக அமையும், மாகாணசபை முறைமையானது ஏற்கனவே இலங்கையின் அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ள ப்பட்டுள்ளதாலும், அதை முழுமையாக அமுல்படுத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்களிப்பை பெறுவது அவசியமில்லை என்பதாலும், தென் இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் இன்று மாகாணசபை முறைமையை அச்சங்களற்று அனுபவிக்கின் றார்கள் என்பதாலும் இதுவே இலங்கையின் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள் ளக்கூடிய வழிமுறையாகும் என்று எடுத்துரைத்தார்.

அத்துடன் 2010 ஆம் ஆண்டு இதுபோன்று உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா வந்திருந்தபோது, இந்திய அரசிடம் எமது மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டித்த ருமாறும், இன்னும் பல உதவிக் கோரிக்கைகளையும்விடுத்திருந்தேன். அதை நிறைவேற்றித் தந்த இந்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதுபோல் தற்போது வடக்கு கிழக்கில் எஞ்சியிருக்கும் மீள்குடியேற்றங்களை செய்வதற்கும்,பாதுகாப்பான வீட்டுவசதிகள் கிடைக்காமல் இருப்போருக்குமாக சுமார் ஒரு லட்சம் கல்வீடுகள் எமக்கு தேவையாக இருக்கின்றது. அந்தத் தேவையை நிறைவேற்ற இந்திய அரசு எமக்கு உதவ வேண்டும் என்று எமது மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன்.

யுத்தத்தால் அழிந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை மீளக்கட்டி எழுப்பும் பிரதான திட்டமாகவும்,வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவும் பலாலி விமான தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத் தையும் சர்வதேச தரத்திற்கு இந்திய அரசு புனரமைத்துத்தர வேண்டும். அவ்வாறு பலாலி விமான தளமும், காங்கே சன்துறை துறைமுகமும் நிறைவான சேவையை வழங்குமாக இருந்தால்,அது வடக்கு கிழக்கு மக்களுக்கு மட்டுமல்லால், தென் இலங்கை மக்களுக்கும் கூடுதல் நன்மைகளை பெற்றுக்கொள் ளக்கூடியதாக அமையும் என்றும் சுட்டிக்காட்;டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,தமிழ் நாட்டில் அகதிகளாக நீண்டகாலம் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழ் மக்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பி வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு வசதியாக வெளியேறும் அனுமதியை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். எனவே அந்த மக்களுக்கு வெளியேறும் அனுமதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ளவும் அவர்களின் வளமான எதிர்காலத்திற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசும் செயற்பட வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், யுத்தத்தால் எல்லா வழிகளிலும் பின்னடைவு கண்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தையும், அங்கு பெரும் துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களினது வாழ்வியலையும் எதிர்காலம் மீதான நம்பிக்கையுடம் மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, இந்திய அரசு தேவையான உதவியையும், பங்களிப்பையும் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்