இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய பெண் ஒருவர் மீது பாலியல் வல்லுறவு முயற்சி

ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து இலங்கைக்கு வந்த இளம் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொக்கல கடற்கரை பிரதேசத்தில் வைத்து 26 வயதான பெண் ஒருவரே இவ்வாறான பிரச்சனைக்க முகம் கொடுத்துள்ளார்.

ஓய்வு பெறுவதற்காக இலங்கைக்கு வருகைதந்த குறித்த பெண் கொக்கல பிரதேச சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த போது அங்கிருந்து கொக்கல கடற்கரைக்கு நடந்து சென்ற பெண்ணை சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் போது அந்த பெண் கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதன்போது சந்தேக நபர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாகவும் எனினும் குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை கடந்த மாதம் இலங்கை வந்த ஐரோப்பிய பெண்ணொருவர் மர்மமான முறையில் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன்காரணமாக வெளிநாட்டு பெண்களை இலங்கைக்கு வர வேண்டாம் என பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்