இரண்டு பிள்ளைகளுடன் தந்தை ஒருவர் ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை!

நேற்று இரவு தந்தை ஒருவரும் அவரது பிள்ளகைளும் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் வெலிகந்த பகுதியில் இடம் பெற்றுள்ளது.
40 வயதான தந்தையும், அவரது 5 மற்றும் 11 வயதான மகன்கள் ஆகியோருமே இவ்வாறு உயிழந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்ப பிரச்சினை காரணமாகவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த விடயளம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
உயிரிழந்த நபரின் மனைவி 5 மாதங்களுக்கு முன்னர் தனது 18 வயதான மூத்த மகனுடன் வேலை வாய்ப்பிற்காக கொழும்பிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர்களை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருமாறு கோரி நேற்றைய தினம் குறித்த நபர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் காவல்துறை அந்த பெண்ணிடம் தொலைபேசி ஊடாக அழைத்து உரையாடிய போது, இன்னும் சில மாதங்களில் வீட்டுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளுடன் நேற்று இரவு தொடரூந்து முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்