மஹிந்த மீது இந்திய காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தி

ஶ்ரீலங்காவின் முன்னாள் மஹிந்த  மீது இந்திய காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் உள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

மூன்று நாள் உத்தியோகப்பூர்வப் பயணம் மேற்கொண்டு சுப்ரமணியம் சுவாமியின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்குச் சென்றிருந்தமஹிந்த ராஜபக்ஷ, காங்கிரஸ் கட் சியின் முக்கிய தலைவர்களைச் சந்திப்பைத் தவிர்த்துள்ளார்.

கடந்த காலங்களில் மஹிந்த, இந்தியாவுக்கான விஜயங்களை மேற்கொண்டிருந்தபோது முதலில் காங்கிரஸ் தரப்பைச் சந்தித்து விட்டே ஏனையவர்களுட ன் பேச்சுகளை நடத்துவார். ஆனால், இம்முறை அது வழமைக்கு மாறாக இடம்பெற்றுள்ளது.

மோடி உட்பட பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்துள்ள மஹிந்த, காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களைச் சந்திப்பைத் தவிர்த்துள்ளார். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி, மஹிந்த மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், காங்கிரஸுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்குமான உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்