வவுனியாவில் கோர விபத்து: புகையிரதத்துடன் மோதி நான்கு பெண்கள் பலி!

ஓமந்தை பகுதியில் இன்று புகையிரதத்துடன் சிறிய ரக கார் மோதியதி விபத்துக்குள்ளான விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் சிறிய கார் ஒன்று பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோதுண்டே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர். இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவன் ஒருவரும் காரின் சாரதியும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே காரில் இருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

காரில் 8 பேர் பயணித்த நிலையில் சாரதியும்இ சிறுவன் ஒருவரும் மயிரிழையில் எந்தவிதகாயங்களும் இன்றி தப்பியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் காரின் சாரதியை கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்