சிவாஜிலிங்கம் இந்தியாவின் குற்றவாளி: உள்நுழைய விசா அனுமதி மறுப்பு!

இந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சி நெறிக்குச் செல்லும் குழுவில்உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தியாவிற்குள் உள்நுழையும்  குற்றவாழிகள் பெயர் பட்டியலில் உள்ளதாக தெரிவித்து  இந்தியா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குஇந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. மாகாண சபை உறுப்பினர்கள் இரண்டுகட்டமாக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியஉறுப்பினர்கள் இந்தியாவின் ஹைதரபாத் நகருக்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளனர்.இந்தக் குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின்பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இந்தியாவின் கறுப்ப பட்டியலில் நுழைவதற்கான தடைவிதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சிவாஜிலிங்கமம் இருப்பதால் அவருக்கான நுழைவு விசாவை  இந்தியத் தூதரகம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்