யாழ் நோக்கிச் சென்றவைர்களுக்கு ஏற்பட்ட கோர விபத்து! வாக்குமூலம் அளித்தான் சிறுவன்!!

வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்களினை யாழ்ப்பாணத்துக்கு ஏற்றிச்சென்றுள்ள மகிழூந்து ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச்சம்பவம் ஆனது வவுனியா – ஓமந்தை பகுதியில் நேற்று காலை இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் உயிழந்துள்ளனர்.
அத்துடன் படுகாயமடைந்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு மேற்கை சேர்ந்துள்ள வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்றுள்ள மகிழூந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி மற்றும் வாகனத்தில் பயணித்த சிறுவன் ஆகிய இருவரும் காரிலிருந்து பாய்ந்து எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பினர்.

குறித்த விபத்து தொடர்பில் மயிரிளையில் உயிர் தப்பியுள்ள சிறுவன் ஒருவன் சாட்சியம் அளிக்கையில் ‘புகையிரதம் வருகிறதென எச்சரித்தும் சாரதி மாமா காரை செலுத்தினார்‘ என சாட்சியளித்துள்ளான்.

இந்த விபத்து தொடர்பாக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்