அடிமைகளா நாம்: யாழ். போதனா வைத்தியசாலையில் போர்க்கொடி துக்கும் ஊழியர்கள் – அதிர்ச்சியில் நிர்வாகம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஊழியர்களது அடிப்படை உரிமைகளைக் கூட வழங்கவதற்கு யாழ் போதனா  வைத்தியசாலை நிர்வாகம் மறுத்து வருவதுடன் தம்மை அடிமைகள் போன்று நடத்தி வருவதாகவும்  வைத்தியசாலை ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது –

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களை தவிர்ந்த ஏனைய அனைத்து ஊழியர்களையும் அவர்களுக்கான சிறப்பு சலுகைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அடிமைகளாக மநிதநேயமற்ற தன்மையுடன்  யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் நடத்துவதாக ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால் பல ஊழியர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பணிப்பாளரிடம் தெரியப்படுத்தியும் எதுவிதமான தீர்வும் தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக  வைத்தியசாலையின் ஒரு பகுதி ஊழியர்களது குழியலறைகள் மற்றும் மலசல கூடங்கள் என்பன உக்கிய நிலையில் தகரத்தால் மூடப்பட்டு எந்நேரத்திலும் அவை அதை பாவிப்பவர்களை பாதிக்கும் ஆபத்து நிறைந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் ஊழியர்கள் வைத்தியசாலைக்கு வருவதற்கான  போக்குவரத்துக்குப்  பாவிக்கும் மோட்டார் சைக்கிள்களைக் கூட வாகன தரிப்பிடங்களில் தரித்து நிறுத்தவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

வெளி நோயாளர்களானாலும் சரி தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளரிகளானாலும் சரி அவர்களை தரக்குறைவாக ஊழியர்கள் நடத்துவதையோ அன்றி நோயாளர்களை கவனியாது தமது காதலர்களுடனும் இன்னும் பலருடனும் உல்லாசம் புரிந்துகொண்டும் இருப்பதையோ அன்றி சிகிச்சையின் போது நடைபெறுகின்ற அசமந்தப் போக்குகளையும் கண்டு கொள்ளாதிருக்கும் யாழ் போதானா வைத்தியசாலை நிர்வாகம் இதனையும் அவ்வாறான ஒன்றாகவே கருதிகின்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதாரண ஊழியர்களை கொண்டு தமது தனிப்பட்ட தேவைகளைக் கூட நிவர்த்தி செய்தகொள்ளும் வைத்தி அதிகாரிகள் நிபுணர்கள் அந்த ஊழியர்களின் நலன்களில் எதுவிதமான அக்கறையும் கொள்வதில்லை என குற்றம் சாட்டும் ஊழியர்கள் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினர் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் அரசியல் நோக்கங்கள் காரணமாகவே இவ்வாறு ஊழியர்களை கண்டும் காணதாது அவர்களது உரிமைகளை பெற்றுக்கொடுக்காது இருக்கின்றனர் என சொல்லப்படுகின்றது.

 

இந்நிலையில் நிர்வாகம்  தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுமாயின் யாழ். போதனா வைத்தியசாலை தனது மகிமையையும் பெயரையும் தனித்தவத்தையும் இழக்க நேரிடும் என்றும் ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் பண்ணைக் கடலில் கலக்கவிடப்படுகின்றது என பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தம் அதை மறுத்த வைத்தியசாலை நிர்வாகம் பின்னர் அது ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டபோது அதை தற்போது ஏற்று நடவடிக்கை எடுப்பதாக கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலை  பணிப்பாளரே இது உங்களின் கவனத்திற்கு…

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்