ரசிகர்களின் கிண்டல்களுக்கு ஆளானார் இலங்கை கிரிக்கட் வீரர் ருசல் அர்னால்ட்

இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ணத்தை விட்டு வெளியேறிய நிலையில் அந்த அணியின் முன்னாள் வீரர் ருசல் அர்னால்ட் ரசிகர்களின் கிண்டலுக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
துபாயில் நடந்து வரும் ஆசிய கிண்ண தொடரில் இரு தினங்களுக்கு முன்னர் நடந்த போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் இலங்கை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது.
இன்னிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணையாளருமான ருசல் அர்னால்டு ஆசிய கிண்ண தொடர் தொடங்குவதற்கு முன்னர் கிண்டலாக ஒரு டுவிட் செய்திருந்தார்.
அதில், ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதுவதை காண விரும்புகிறேன்.

அந்த இரண்டு அணிகளில் ஒரு அணி தொடர் தொடக்கத்திலேயே வெளியேறினால் நான் வருத்தமடைவேன் என டுவிட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 https://twitter.com/RusselArnold69/status/1038387630558261248

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்