இந்த விடயத்தில் தவறு செய்து விட்டோம்; ரோஹித் ஷர்மா தெரிவிப்பு!

ஹாங்காங் அணிக்கு எதிராக பந்துவீசிவதில் தவறு செய்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கிண்ண தொடரில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி போராடி ஹாங்காங்கை வென்றது. இந்தியா நிர்ணயித்த 286 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஹாங்காங், 8 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘ஹாங்காங்கிற்கு எதிரான போட்டி எளிதாக இருக்காது என்பதை அறிந்து இருந்தோம்.

இறுதியில் வெற்றி பெற்றது முக்கியமானது. நாங்கள் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கினோம். ஆனால் அதை காரணம் காட்டக் கூடாது. பந்துவீச்சில் தவறு செய்துவிட்டோம்.

இன்னும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதை கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் வெற்றியை நோக்கி முன்னேறினர். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

எந்த ஒரு கட்டத்திலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. கடைசி கட்டத்தில் நெருக்கடி சூழ்நிலையை கையாண்ட விதம் சிறப்பானது. அடுத்தடுத்து போட்டிகளில் மோதுவதால் எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் தான் ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது’ எn தெரிவித்துள்ளார்

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்