19 வயது இளைஞன் வவுனியாவில் கைது – வெளியானது அதிர்ச்சி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பேருந்தில் பயணித்துள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் கேரள கஞ்சாவினை கடத்தி சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் பயணித்துள்ள கொழும்பை சேர்ந்த சத்தியவேல் சஞ்சீவன் (19 வயது) என்ற இளைஞரே 6மப கேரளா கஞ்சாவுடன் கைதாகியுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்