யாழில் சர்வதேச திரைப்படவிழா விரைவில் ஆரம்பம்

தொடர்ந்தும் நான்காவது வருடமாக இந்தவருடத்துக்கான சர்வதேச திபை;பட விழா யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ளது.
ஒக்டோபர் 3 ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் நோக்கம் சுயாதீன திரைப்படக் கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதாகும். முப்பது வருட யுத்த இழப்புகளிலிருந்து மீளெழும் ஒரு முயற்சியாகவும் இது அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண சர்வதேச தி;ரைப்பட விழா(Jaffna International Cinema Festival) ஆனது யுபநனெய 14 மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தப்படுகிறது.

இந்த வருடத் திரைப்பட விழாவில் 30 நாடுகளைச் சேர்ந்த 80 திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவற்றுள் முழுநீள, விவரண, குறுந்திரைப்படங்கள் ஆகியன உள்ளடங்கும். விழாவில் – ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பூட்டான், பிரேசில், கனடா, குறோஷியா, கொலம்பியா, செக் குடியரசு, எகிப்து, பிரான்ஸ்;, ஜேர்மனி, இந்தியா, ஜப்பான், கர்க்கிஸ்தான், கஸாக்கிஸ்தான், மங்கோலியா, நேபாளம்;, போலந்து, பாகிஸ்தான், சிங்கப்பூர், சுலோவோக்கியா, இலங்கை, சுவிற்ஸலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருட துயககயெ ஐஊகு ஒக்டோபர் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள மஜஸ்டிக் திரையரங்கில் மாலை 5.45 மணிக்கு ஆரம்பித்து, விருதுகள் வழங்கும் நிகழ்வு அதே திரையரங்கில் ஒக்டோபர் 8ஆம் திகதி மாலை 6.15 மணிக்கு இடம்பெறும்.

விழாவின் ஆரம்பத் திரைப்படமாக, ‘ த யங் கார்ல் மார்க்ஸ்’ (இயக்குனர் ஜேர்மனியைச் சேர்ந்த ரவூல் பெக் – (2017/18))> , முடிவுநாள் திரைப்படமாக ‘சுவீற் கன்றி’ (இயக்குனர் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ‘வாரிக் தோன்ரன்’ (2017 / 113)ஆகியன திரையிடப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் இவ்விழாவில் 5 சாதனையாளர் விருதுகளும் வளங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவுத் தெரிய வந்துள்ளது.

 

 

 

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018 கோலாகலமாக விரைவில் ஆரம்பம்5 hழரசள யபழசுநிழசவ

தொடர்ச்சியாக, 4ஆவது வருடமாக, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டும் ஒக்ரோபர் 03ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

இவ்வருட விழாவில்Saffaa Elaisy Haggag (Egypt), Urvashi Archana (India) and Muralitharan Mauran (Sri Lanka)ஆகியோர் அறிமுக திரைப்படங்களுக்கான நடுவர்களாக இருப்பர்

Carla Maria Losch (Germany),Aunohita Mojumdar (India), Dr. S. Jeyasankar (Sri Lanka)ஆகியோர் குறுந்திரைப்படங்களுக்கான நடுவர்களாகப் பங்காற்றவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த வருட விழா – மலையாள இயக்குனர் சஜி நாராயண் கருண்; படைப்புக்களை நினைவு கூரவிருக்கிறது. அவரின் ‘பிறவி’ (1989), ‘வனப்பிரஸ்தம்’ (1999), ‘குட்டி சிராங்’ ;(2009), ‘சுவப்பனம்’ (2013) ஆகிய முழுநீளத் திரைப்படங்களும்;, மேலும் 03 குறுந்திரைப்படங்களும்; திரையிடப்படவுள்ளதுடன்
; இந்த ஆண்டுக்கான முன்னிலைப்படுத்தப்படும் நாடாகப் போலந்து விளங்குகிறது: போலந்து நாட்டு திரைப்பட இயக்குனர்களான Andrzej Wajda,Krzysztof Kieslowski, Roman Polanski ,Andrzej Munkand Jerzy Kawalerowicz ஆகியோரின் புத்தாக்கம் செய்யப்பட்ட மூன்று திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.

இலங்கைத் திரைப்படப் பிரிவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விவரணப்படத் தொகுதி ஒன்றை இரண்டாவதுமுறையும் இந்த விழாவில் வழங்கவிருக்கிறது.

சிறப்புத் திரைப்படங்களாக தீபா மேத்தாவின் ‘வன்செயலின் கட்டமைப்பு'(The Anatomy of Violence), லூயிஸ் ஒஸ்மண்ட்டின் ‘‘Versus: The Life and Films of Ken Loach’,  பிராட் ஓல்கூட் மற்றும கிரஹாம் ரௌன்சிலியின்‘Landfill Harmonic’ ஆகியன காண்பிக்கப்பட வளு;ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்