ஜேர்மனியில் முடிவடையவுள்ள கோடைகாலம்; வானிலை முன்னறிப்பாளர்கள் விஷேட அறிவித்தல்

ஜேர்மனியில் இன்றுடன் கோடைக்காலம் முடிவுக்கு வருவதால், இன்றே கோடையை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொள்ளுமாறு வானிலை முன்னறிவிப்பாளர்கள் ஆலோசனை வளங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பலத்த காற்றுகளும் புயல்களும் ஜேர்மனியை நெருங்கி வருவதாகவும் வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜேர்மனி ஒரு நீண்ட கோடையையும் கடுமையான வெப்பத்தையும் அனுபவித்து வந்த நிலையில் நாளை முதல் நிலைமை தலைகீழாக மாற இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் வடபகுதியை வார இறுதியில் புயல் தாக்கலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை முதலே வானிலையில் மாற்றம் நிகழ இருப்பதாகத் தெரிவிக்கும் வானிலை ஆராய்ச்சியாளரான னுழஅinமை துரபெஇ வெப்பநிலை குறையப்போகிறது, வார இறுதி குளிர்ச்சியாக இருக்கப்போகிறது மற்றும் ஞாயிறு இரவு கடுமையான புயல் ஒன்று தாக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரப்பகுதிகளில் மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்திலும் பிற பகுதிகளில் மணிக்கு 88 கிலோமீற்றர் வேகத்திலும் காற்று வீசலாம்.

அடுத்த வார துவக்கத்தில் வெப்பநிலை 16 டிகிரியை அடையலாம் என்பதால் இன்றைய தினத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொள்ளுங்கள் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் ஆலோசனை வளங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்