நேற்று யாழில் உலக சுற்றுலா தினம்

நேற்று யாழ் பல்கலைக்கழகத்தில் சுற்றுலாவும், டிஜிட்டல் நிலை மாற்றமும் என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், சுற்றுலா மேம்பாட்டு பணியகமும் இணைந்து பல நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த நிகழ்வில் அவுஸ்ரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் மநசை சுநநஎநள க்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வடமாகாண சபை தொடர்பான ஆவணமொன்றை கையளித்தார்.

 

யாழ் மாநகரசபை திடலில் சுற்றுலா கண்காட்சி , கலாசார நிகழ்ச்சிகள் , உணவு கண்காட்சி, கட்டுரை – புகைப்பட – வீடியோ உள்ளிட்ட போட்டிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
வடக்கில் சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில், உலக சுற்றுலா தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

இந்த நிகழ்வில் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்