சூரிய குடும்பத்தில் புதிய கோள்!

சூரியக்குடும்பத்தில் புளுட்டோவிற்கு அப்பால் சிய கோள் ஒன்று சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“Goblin” என அழைக்கப்படும் “2015 TG387” எனும் இக் கோளானது 2015 இல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், தற்போது ஒக்டோபர், 1 ஆம் திகதியே இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கோளானது பனிப்பந்து போல காட்சி தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் விட்டம் 300 கிலோமீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒழுக்கு புவிக்கும் சூரியனுக்குமிடைப்பட்ட தூரத்தைப் போல 2,300 மடங்கு தூரமுடையதாகும்.

மிக நீண்ட ஒழுக்கில் சூரியனை வலம்வரும் இக்கோளானது அதன் ஒழுக்கில் பயணிக்க கிட்டத்தட்ட 4,000 வருடங்களை எடுத்துக்கொள்வதாக ஹவாய் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்து Planet X இற்கான தேடுதல் வேட்டையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Planet X என்பது ஒரு அனுமானக் கோள், இது நமது சூரியத் தொகுதியின் எல்லையில் இருக்கலாம் என நம்பப்டுகிறது.

இதன் பாரிய பருமன் காரணமாகக் கொண்டுள்ள ஈர்ப்புசக்தியின் காரணமாக இது “Goblin” போன்ற சிறு கோள்களை அண்மிக்கும் போது அவற்றுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்