யாழ் முதல்வர் ஆர்னோல்ட் பெரும் மோசடி : அதிகாரத்தி லிருந்து துரத்தப்பட வாய்ப்பு? – அதிர்ச்சியில் கூட்டமைப்பு!

தனது கட்டிட ஒப்பந்ததாரரான சகோதரனின் மோசடிகளை ஏற்று அந்த ஊழல்களை ஆதரிப்பதாக முக்கிய ஆவணங்களில் கையொப்பமிடுமாறு வற்புறுத்திய ஆர்னோல்ட்  அதற்கு இணங்காத மாநகரின் நேர்மை மிக்க உயர் அதிகாரி ஒருவரை தன்னிச்சையாக பழிவாங்கியுள்ளார் ஆர்னோல்ட் என யாழ் மாநகர சபையின் அதிகாரிகள் புலம்புகின்றனர்.

தமிழ் மக்களை தேசியம் என்ற போர்வைக்குள் வீழ்த்தி தமது சுயநல அரசியலையும் குடும்ப முன்னெற்றங்களையும் மேற்கொண்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் பரம்பரையில் தற்போது யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்டும் இணைந்துள்ளார்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழ் மக்களிடமிருந்து ஓரங்கட்டப்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைபினர் அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என தட்டுத் தடுமாறி ஆசனங்களை பெற்று மற்றய தரப்பினரின் தயவுடன் பீடமேறியுள்ள கூட்டமைப்பின் உள்ளுராட்சி தலைவர்கள் சத்தம் சந்தடியின்றி தமது கைங்கரியங்களை காட்டத் தொடங்கியுள்ளனர்.

புலம்பெயர் தமிழர் ஒருவரிடமிருந்த பெற்ற பெருந்தொகை பணத்திற்காக காரைநகரில் மதுபானச்சாலை அமைக்க கூட்டமைப்பு சார்பு தவிசாளர், பிரதி தவிசாளர் அனுமதி வழங்கிய விவகாரம் ஒருபுறம் சூடுபிடித்துள்ள நிலையில் மறுபுறம் யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் தனது மோசடிக்கார சகோதரனிற்காக மாநகரின் அதிகாரம் மிக்க அதிகாரியொருவரை பந்தாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட்டின் சகோதரர் தனியார் கட்டட ஒப்பந்த நிறுவனமொன்றை நடத்திவருகின்றார். குறித்த நிறுவனம் மூலம் குருநகரில் முறையற்ற கட்டடமொன்றை அவர் நிர்மாணித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்.மாநகரசபையின் கட்டட நிர்மாண வேலைகளை மேற்பார்வை செய்கின்ற அதிகாரியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் குறித்த முறையற்ற கட்டட வேலைக்கான அனுமதியை வழங்க அவர் மறுதலித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த அதிகாரியை தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ள யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் முறையற்ற கட்டடத்திற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

எனினும் அதனை அமுல்படுத்த குறித்த அதிகாரி மறுத்ததால் கோபமுற்ற யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் உடனடியாக இடமாற்றத்தின் கீழ் குறித்த நேர்மையான அதிகாரியை யாழ்.மாநகரசபையிலிருந்து விரட்டியடித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக வேறு ஒரு உள்ளுராட்சி சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள குறித்த நேர்மையான அதிகாரி மனஉளைச்சலுடன் நேரகாலத்துடன் ஓய்வுபெற முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எது என்னவொ இன்றும் இரண்டு வாரத்தில் வடக்கின் மாகாணசபை கலையப்போகின்றது. இதனால் அதன் ஆட்சி அதிகாரம் வடக்கு மாகாண ஆழுநரின் கைகளுக்கு வரவுள்ளது. இதனால் வடக்கின் அபிவிருத்தியை ஆழுநரைக்கொண்டு ஆற்றலுள்ளவர்கள் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக மக்கள் மட்டுமல்ல புத்திஜீவிகளும் பேசிக்கொள்வதுடன் இந்தகைய ஊழல்களும் ஊழைல் வாதிகளும் துரத்தப்பட வாய்புக்களும் உள்ளதாக பேசிக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்