வடக்கு மக்களுக்கு அவசர எச்சரிக்கை: பரவுகிறது எலிக்காய்ச்சல்: ஐம்பத்து ஐந்து பேர் பாதிப்பு!

லேப்டோஸ் பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் காரணமாக வடக்கு மாகாணத்தில் நடப்பாண்டில் இதுவரை 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் அதிகமானவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பகுதியினரால் மாதாந்தம் வெளியிடப்படும் நோய்த் தாக்கங்கள் பற்றிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாகவே லேப்டோஸ் பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோய் பரவுகிறது என்கின்றனர். மருத்துவர்கள். வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் சற்றுக்குறைவானதாகவே காணப்படுகின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நோயின் தாக்கத்தால் வடக்கு மாகாணத்தில் 108 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டு யாழ்;பாணத்தில் 38 பேரும், வவுனியாவில் 33 பேரும், முல்லைத்தீவில் 28 பேரும், மன்னாரில் 3 பேரும், கிளிநொச்சியில் 6 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்