புலிகளின் கப்பலை பார்வையிட தடை

தமிழீழ விடுதலைப்புலிகளின் போர்க்கப்பலினை பார்வையிட இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி யோர்தான் நாட்டுக்கு சொந்தமான போர் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது.

பின்னர் குறித்த கப்பல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
குறித்த இதே வேளையில் விடுதலைப் புலிகளின் கடற்புலி அணியினர் இந்த கப்பலை சிறப்பு பயிற்சிகளுக்காக பயன்படுத்தியதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த கப்பலின் மேற்பாகங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் அகற்றப்பட்ட நிலையில், அதன் அடித்தளம் மட்டும் கடலில் மிஞ்சியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகள் இவற்றை பார்வையிட அந்தப்பகுதிக்கு சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் தற்பொழுது தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்