ஒரு பாதையில் நேர் எதிரே வந்தன ரயில்கள் – யாழில் ஏற்படவிருந்த விபத்து தவிர்ப்பு

யாழ்ப்பாணம் கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரே பாதையில் நேர் எதிரே வந்த ரயில்களினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து அதிகாரிகளின் சாதுரிய நடவடிக்கையினால் தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலும், கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி ரயிலும் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேர் எதிரே வந்துள்ளது.

அதனை அறிந்த புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு இரு ரயிலையும் நிறுத்தியுள்ளனர். பின்னர் கொழும்பில் இருந்து வந்த ரயில் தடம் மாற்றப்பட்டு பயணத்தை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்