மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் விசேட குழு

அதிகரித்த எரிபொருளின் விலைக்கு அமைய மின்சக்தி துறைக்கு ஏற்பட்டுள்ளதாக்கம் குறித்து அடுத்த வாரத்திற்குள் விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் எரிபொருளின் விலை அதிகரிப்புக்கு அமையஇ மின் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டுமா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இதற்கு முன்னர்இ மின் உற்பத்திக்கான 95 ரூபாவிற்கு டீசல் பெற்றுக்கொண்டபோதிலும்இ தற்போது 123 ரூபாவிற்கு டீசலை கொள்வனவு செய்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால்இ நியமிக்கப்படவுள்ள குழுவின் ஆலோசனைக்கு அமைய எதிர்கால நடடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்இ மின்கட்டணம் அதிகரிக்கப்படுமா என கலாநிதி சுரேன் பட்டகொடவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோதுஇ கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு 15 நாட்களிற்கு முன்னர்இ பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் சட்டமூலத்தின் கீழ் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்த வேண்டுமாயின்இ சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதே வேளை மின் கட்டணத்திற்கும் விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்குஇ மின்சாரசபை தயாராகிவருவதாக மின்சக்தி தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்