திருமணமாகி சில நாட்களில் கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி!

சென்னையில் உள்ள திருவான்மியூர் கடற்கரையில் மனைவி நடத்திய வழிப்பறி நாடகம் மூலம் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்ட கணவர் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கதிரவன் என்பவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அவருக்கும் அனிதா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் புதுமண தம்பதி திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர்.

அப்போது பைக்கில் வந்த இருவர் கதிரவனை சரமாரியாக தாக்கிவிட்டு அனிதாவிடம் இருந்த 12 சவரன் தங்க சங்கிலியையும், செல்போனையும் பறித்து சென்றனர்.

இதையடுத்து கதிரவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பொலிஸ் விசாரணையில், திருமணம் செய்த கணவனை பிடிக்காததால் முன்னாள் காதலனான ஆண்டனிஜெகன் மூலமாக கொள்ளை சம்பவம் என்ற போர்வையில் கணவரை கொலை செய்ய அனிதாவே திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அனிதாவையும், ஆண்டனிஜெகனையும் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்