வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முதல்வர் ஆயுள்க்காலம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அதனையடுத்து அவர் வடக்கில் தடல் புடலாக புலிகளின் ஆதரவு சக்தியாக தன்னைக் காட்டிக்கொள்ள பெரும் எடுப்பில் ஒரு கொண்டாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். அதில் அவர் ஒருபடி மேல் சென்று புலிக்கொடி மற்றும் புலிச்சின்னம் பொறித்து விளம்பரப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தயவில் வந்து வடக்கின் அதிகாரம் மிக்க பதவியை அலங்கரித்து குரங்கின் கை பூமாலை போல வடக்கு மாகாணசபையை ஆக்கிவிட்டு ஆயுளை நிறைவு செய்கிறார் விக்கியர்.
இதற்கிடையில் தன்னை கொண்டுவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் முரண்பட்டு புலம்பெயர் தேசத்து பினாமிகளின் ஏவலாளியாக மாறி வடக்கை குழப்பிவரும் கோட்டாபாயவின் அள்ளக்கை கஜேந்திரகுமாருடன் கைகோர்த்து தமிழ் மக்களை நிம்மியிழக்க செய்ய மறுபடியும் திரைமறைவு நாடகத்தை அரங்கேற்றுகிறார் விக்கி.
இதற்கான ஏற்பாடுதான் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள அவரது அரசியல் அடுத்த கட்ட அறிவிப்பு. வரும் 24 ஆம் திகதி தனது அரசியல் இருப்பு பற்றி அறிவிக்கவுள்ள விக்கியருக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டிருக்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.
பல பெண்களுடன் தவறான உறவை கொண்டிருந்த காரணத்தால் புலிகளால் தந்தையை இழந்த ஒருவருர் எப்படி புலிகளது பிரதிநிதியாக மனச்சாட்சியுடன் செயற்படுவார்? என்றோ ஒருநாள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது அந்தப் புலிகளை மாட்டிவிடவே அவர் முனைவார். இந்த நிலைதான் அண்ணன் கஜேந்திரகுமாருக்கு இருக்கிறது. தந்தை குமார் பொன்னம்பலம் எப்படி எந்நிலையில் சுடப்பட்டார் என்று கஜேந்திரகுமாருக்கு நன்கு தெரியும். இதை அவர் மறுக்க முடியாது.
அதனால் தான் அவர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்த இறுதி காலத்திலும் வெளிநாட்டில் இருந்து புலிகளது அழிவை இரசித்துவந்தார். ஆனால் யுத்தம் முடிந்தபின்னரும் தற்போதும் வெளிநாடுகளின் பணத்தக்காக அரசின் பினாமியாக இருந்து செயற்பட்டு தமிழ் மக்களின் நிம்மதியை குலைக்கின்றார் அவர்.
புலிகளுக்கு வக்காளத்து வாங்கி பல்கலைக்கழகத்திற்கு பின்கதவால் சென்று பினாமியாக இருந்து செயற்பட்டதால் புலிகளால் கள்ளவாக்கு போட்டு மக்கள் பிரதிநிதியானவர் குதிரை கஜேந்திரன்.
நாட்டில் மஹிந்த ராஜபக்சவின் கை ஓங்கியவுடன் 40 ஆயிரம் சவப்பெட்டியை தயார் செய்யுங்கள் என்று சொல்லி தென்னிலங்கையை சூடாக்கிவிட்டு இலங்கையில் தனக்கு உயிராபத்து என்று சொல்லி புலிகளால் வழங்கப்பட்ட பினாமி முதலீடுகளையும் சொத்துக்களையும் விற்று தனது வங்கிக்கணக்கில் போட்டுவிட்டு புலிகளுக்கு டிமிக்கி காட்டி வெளிநாட்டுக்கு ஓடி ஒழிந்து கொண்டவர்தான் கழுத்துவெட்டி கஜேந்திரன்.
அதுமட்டுமல்ல கொத்துக் கொத்தாக இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது ஐரோப்பாலில் தனது புது மனைவியுடன் விதவிதமா ஹனிமூன் கொண்டாடிக்கொண்டிருந்தவர் இவர்.
பின்னர் அவரது தம்பியார் ஆயுதங்களுடன் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த போது அவரை விடுவிக்க தனது தம்பிக்காக தமிழ் மக்களது ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் அழிப்பதாக றொகான் குணவர்த்தன என்ற கோட்டபாயவின் நெருங்கிய ஒருவரைக்கொண்டு அரசுடன் சிங்கப்பூரில் ஒப்பந்தம் செய்து இலங்கை வந்து வெளிநாடகளில் மறைந்திருக்கும் புலிகளையும் அவர்களது சொத்துக்களையும் காட்டிக் கொடுத்து தனது பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார் குதிரை கஜேந்திரன்.
அந்தவகையில் புலிகளால் பாதிக்கப்பட்ட ஒருவரும் புலிகளுக்கு தண்ணி காட்டிய ஒருவரும் இணைந்த கூட்டு தமிழ் மக்களுக்கு எப்படி தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும்?
புலம்பெயர் தேசத்து சில பினாமிகளுக்காக இலங்கையில் குழப்பத்தை தோற்றுவிப்பதற்காக அலைந்து திரியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனக்கு பக்க துணையாக வைத்திருக்க இப்போது நீதியரசர் விக்கியை கரம்பிடிக்க துடிக்கிறது.
அரசியல் தெரியாது விக்கியர் தனது இறுதிக் காலத்தை எப்படியும் பதவியுடன் முடிக்கவேண்டும் என்று துடிக்கிறார். இதற்கு தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு சாராரும் குடைபிடிக்க துடிக்கிறார்கள்.
புலிகள் கட்டிய வீட்டுக்குள் ஒழிந்திருந்துகொண்டு மக்களிடம் வாக்கு கேட்டு பதவியை பெற்றவர்கள் எல்லோரும் தாங்கள் இப்பவும் பலம் மிக்கவர்கள் என்று கற்பனையில் மிதக்கின்றார்கள் என்பது போலத்தான் யாழ்ப்பாணத்து அரசியல் கழம் தெரிகின்றது.
வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் மடியும்வரை தமது பதவியை தக்கவைப்பதற்காக வீட்டுக்குள் ஒட்டிக்கிடந்த அனந்தி அக்காவும் தனக்கு அதிக மக்கள் செல்வாக்க இருக்கிறது என்று சொல்லி புலம்பெயர் தேச பினாமிகளின் கதையை கேட்டு தனிக்கட்சி அறிவித்துவிட்டார். அதன் ஆரம்ப நிகழ்வுக்கு மக்கள் கூட்டம் வரும் என அவர் கற்பனை கண்டு ஊடகங்களுக்கம் அழைப்பு விடுத்தார். ஆனால் கடைசியில் ஒரு 20 பேருடன் தான் நிகழ்வு நடந்தது.
இதனால் தனக்கும் அவ்வாறு நடந்தவிடும் என்று அஞ்சி தனது அரசியல் அறிவிப்பை தடல்புடலாக அறிவிக்க இருந்த விக்கியர் கடைசி நேரத்தில் நிகழ்வு நடக்க இருந்த இடத்தையும் மாற்றியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனாலும் புலிகளின் கொடியையும் அவர்களது சின்னத்தையும் துண்டுப்பிரசுரங்களாக வெளியிட்டு மக்களை திசைதிரப்பி மறுபடியும் யாழ்ப்பாணத்தில் புலிக்கொடி ஏற்ற அவர் முயல்கிறார் என்கிறார்கள் புத்திஜிவிகள்.
ஆக இரண்டு துரோகிகளுடன் விக்கியும் சேர்ந்து தமிழ் மக்களை நடு வீதியில் விடப்போவது உறுதி.
அந்தவகையில் எது நடக்கிறதோ இல்லையோ தமிழ் மக்களை சனீஸ்வரர் விட்டகலார் என்பதே உண்மை.