மீண்டும் திறக்கப்படவுள்ளது நீளமான கடற்பாலம்

கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட கடல் பாலம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்லும் வகையிலேயே குறித்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இடைவெளிக்கு பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 24-ம் திகதி குறித்த பாலம் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தினால் சீனா மற்றும் ஹொங்கொங் இடையேயான பயண நேரம்இ 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்த பாலம்இ சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை இந்த பாலத்தில் பயணம் செய்ய சிறப்பு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்த பாலம்இ மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் பிற்போடப்பட்டு வந்த நிலையில் தற்போது திறக்கப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்