மஹிந்தவுக்கு ஆதரவு கொடுக்க சிறீதரன் M.P. இணக்கம் – கோட்டபாய ராஜபக்சவுடன் 20 கோடி ரூபா பேரம் – கடுப்பானார் சுமந்திரன்!

தலைமையுடன் பேரம் பேசுவதை விடுத்து தன்னுடன் நேரடியாக பேரம் பேசினால் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவுதரத் தயார் என வன்னி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நல்லாட்சி அமைக்கும் போது ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டை அடுத்து வழங்கப்பட்ட பல கோடி ரூபா நிதியில் தமக்கு ஒரு சிறு தொகையே வழங்கப்பட்டதாகவும் இதனால் கடந்தமுறை தமது தலைமைக்கு கட்டுப்பட்ட நடந்ததால் தாம் ஏமாற்றமடைந்ததாகவும் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் இம்முறை தலைமையை விடுத்து தன்னுடன் மகிந்த தரப்பினர் நேரடியாக பேரம் பேச வந்தால் தான் அவர்களுடன் சமரசத்திற்கு செல்ல சிறீதரன் தயாராக இருப்பதாகவும் இதற்காக குறைந்தது 20 முதல் 25 கோடி ரூபாவை அவர் எதிர்பார்த்திருப்பதாகவும் அவருடன் நெருக்க மானதரப்பு செய்திகள் கூறுகின்றன.

இதற்கான ஒப்பந்தமொன்று அண்மையில் கொழும்பில் கோட்டபாய ராஜபக்சவின் அலுவலகத்தில் சிறீதரன் மேற்கொண்டுள்ளமை தற்போது நம்பகரமான தரப்பினரால் வெளியிடப்பட்டுள்து.

இந்நிலையில் தனது பலத்தை எப்படியாவது நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் மஹிந்த தரப்பினர் சிறீதரனின் பேரம் பேசலுக்கு இணங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் இன்று அல்லது நாளை காலை மகிந்த தரப்பால்  அழைக்கப்படுவார் என அவருடன் நெருங்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்