மஹிந்த பக்கம் தாவுகிறார் விஜயகலா? : தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு -அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்  மஹிந்த ராஜபக்ச அரசில் இணைவதற்கான கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் என அவருக்கு நெருக்கமான தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.

இது குறித்து தெரியவருவதாவது –

கடந்த நல்லாட்சி அரசில் இராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயத்தை பொது மேடையில் பேசியமையால் ரணில் அரசால் அமைச்சுப் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருந்தார்.

குறித்த விடயம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளமையால் விஜயகலாவின் அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் சில ஆண்டுகள் குடியுரிமையையும் இழக்கும் சந்தர்ப்பம் உருவாகும் எனவும் கூறப்படுகின்றது.

தனது தேவைகளுக்கெல்லாம் தன்னை ரணில் பாவித்துவிட்டு தற்போது கைவிட்டுள்ளதால் கடுமையான அதிருப்தியடைந்திருந்த விஜயகலா மகேஸ்வரன் ரணிலுடன் கடுமையாக சண்டையிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க தற்போது ரணிலின் நல்லாட்சி அரசு தூக்கி எறியப்பட்டு மஹிந்த தரப்பினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தியிருப்பதால் அவ்வரசாங்கம் தனது பெரும்பான்மையை நாடாளுமன்றில் காட்ட இதர தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசி பெரும் பேரம் பேசல்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் விஜயகலா குறித்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி மஹிந்த தரப்பினருடன் இணைந்துகொண்டால் சட்டத்திலிருந்து தப்பிக்கலாம் என்று அவரது நெருங்கிய ஆலோசகர்கள் ஆலோசனை தெரிவிக்க விஜயகலா மஹிந்த தரப்பினருடன் நெருக்கமானவர்களை கொண்டு பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளார்.

ஏற்கனவே தனக்கு வேண்டிய நாடாளுமன்ற பெரும்பான்மையை விட மேலதிகமான உறுப்பினர்களின் ஆதரவு மஹிந்தவுக்கு கிடைத்துள்ளமையால் விஜயகலாவின் கோரிக்கையை மகிந்த தரப்பு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரணிலை நம்பி தேசியம், தேசியத் தலைவர் என பல விடயங்களை மேடைகளில் பேசி தமிழ் மக்களை முட்டாளாக்கி வந்த விஜயகலாவுக்கு கட்சி தாவுவதை விட வேறு பாதை இல்லை என்பதால் மஹிந்தவுக்கு தொலைபேசியில் அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்து அடம்பிடித்து வருகிறாராம் விஜயகலா என எமது புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்