சரவணபவன் M.P.யும் மஹிந்தவிடம் சரண்: திணறுகிறது தமிழரசு!

சுதந்திரக் கட்சியில் தொடர்ச்சியாக தேசியப் பட்டியல் உறுப்புரிமையுடன் தனக்கு 3000 மில்லியன் நிதியும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு ஒன்றும் தரும் பட்சத்தில் மஹிந்த ராஜபக்சவின் பக்கம் வர தான் தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் உரிமையாளருமான சரவணபவன் பேரம் பேசியுள்ளதாக சமூக வலைத் தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் ஆட்சி மாற்றத்தை அடுத்து மகிந்த தரப்பும் ரணில் தரப்பும் தத்தமது பலத்தை நிரூபிக்க கடுமையான பிரயத்தனம் மேற்கொண்டு களத்தில் இறங்கியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கும் முயற்சியில் அவ்விரு கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன் நேற்றையதினம் 20 கோடி ரூபாவுக்கு மஹிந்த தரப்பினரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தொடரும் பேரம் பேசல்களில் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சரவணபவன் ஆகியோரும் வீழ்ந்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் கூறுகின்றன.

இதில் செல்வம் 15 கோடி பெற்று ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்தாகவும் அமைச்சு பதவிக்காக அவர் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரம் கனடாவிலிருந்து அவசரமாக இலங்கை வந்து செல்வம் அடைக்கலநாதன் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து இறங்கிய பின்னர் தலைமறைவாகியுள்ளதாகவும்  தெரியவருகின்றது.

இது ஒருபுறமிருக்க தான் ஒரு ஊடகப் போராளி என்று கூறி தமிழ் மக்களின் பல கோடி நிதியை சுருட்டிக்கொண்டோடியவரும்  தேசியத்தை பத்திரிகையில் எழுதிவித்து தமிழ் மக்களை கொலை செய்து அவர்களது ஆத்மாவில் பணக்காரனாக மாறி மக்களிடையே வெட்கமற்று உலாவும் சரவணபவன் மேலும் தனக்கு கொள்ளையடிக்க சந்தர்ப்பம் கேட்டுள்ளார் மஹிந்தவிடம்.

இதைவிட ஒருபடி மேல் சரவணபவன் சென்று டக்ளஸ் மீது வழக்குகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தனது மகனுக்கு மத்திய வங்கியில் வேலை, உதயன் பத்திரிகையில் முற்பக்கத்தில் பிரசாரம், தொடர்ச்சியாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநித்துவம் போன்றவற்றுக்கும் உறுதியளிக்கும் பட்சத்தில் நான் மஹிந்த ராஜபக்சவின் பக்கம் மாறிவர தயாராக உள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளதாக நம்பகரமான செய்திகள் வெளியாகியுள்ளன.

மகிந்த தரப்பு இவரது சில கோரிக்கைகளை நிராகரித்துள்ள போதும் பல கோரிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளதால் இன்று அல்லது ஒருசில தினங்களில் சரவணபவன் எம்.பி அமைச்சராகவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சிவசக்தி ஆனந்தன் இன்று தனது முடிவை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே குறித்த செய்திகளை உறுதி செய்யும் முகமாக எமது செய்திப் பிரிவு தமிழரசுக் கட்சியினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் மூத்த தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் தொலைபேசியை துண்டித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்