ஶ்ரீதரன் M.P.க்கு மீன்பிடி கடற்றொழில்வள அமைச்சு – தகர்ந்தது கூட்டமைப்பு தேசியக் கனவு!

இலங்கையின் ஆட்சி மாற்றத்தை அடுத்து மகிந்த தரப்பும் ரணில் தரப்பும் தத்தமது பலத்தை நிரூபிக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான வன்னிச் சிற்றரசன் ஶ்ரீதரன் மஹிந்த தரப்பிற்கு தாவியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூபா 20 கோடி பணத்திற்கும் வன்னிக்கான மீன்பிடி கடற்றொழில் வள அமைச்சு ஒன்றும் உருவாக்கி தரவேண்டும் என கோரி மஹிந்த தரப்பினரிடம் சிற்றரசன் ஶ்ரீதரன் கோரிக்கை முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு ஒத்துக்கொண்ட மஹிந்த தரப்பு அவருக்கான அமைச்சை உருவாக்கி கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஶ்ரீதரன் எம்.பி. இது தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்சவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்