தலைக்கு 60 கோடிக்கு : தமிழர் பிரச்சினைகளை கைவிட்டு ரணிலிடம் சரணாகதியானது கூட்டமைப்பு!

தமிழர் பிரச்சினைகள் எவற்றையும் கையிலெடுக்காது தமது சுயநலன்களை மட்டும் கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எஞ்சிய நபாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தலா 60 கோடி கொடுத்து ரணில் விக்கிரமசிங்க கொள்வனவு செய்துள்ளார் என தெரியவருகின்றது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து மகிந்த தரப்பும் ரணில் தரப்பும் தத்தமது பலத்தை நிரூபிக்க கடுமையான பிரயத்தனம் மேற்கொண்டு களத்தில் இறங்கியுள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அவ்விரு கட்சியினரும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவின் பக்கம் கட்சி தாவ இருந்த நிலையில் பதறிப்போன ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு 100 கோடியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 60 கோடிரூபாவும் என பேரம் பேசி தனக்கு ஆதரவாக கொள்வனவு செய்துள்ளார். இதனால் தென்னிலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.

தமிழ் மக்களது நலன்கள் தொடர்பில் தாம் பேசிவருவதாக இற்றை நாள்வரை மக்களை நம்பவைத்து ஏமற்றி தமது குடும்ப நலன்களையும் சுகபோகங்களையும் முன்னெடுத்து வந்த தமிழ் தேசியக் கூட்மடமைப்பின் உண்மை நிலை இன்றைய அரசியல் குழப்பநிலை ஊடாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்