யார் சொல்வது பொய்? – வெளியானது உண்மை தகவல்!

பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்ததற்கு எதிராக அரசியல் கட்சிகளினாலும் சிவில் அமைப்புக்களினாலும் உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை 17 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாராளுமன்றத்தைக் கலைத்தல் – தேர்தல் ஆணைக்குழு தேர்தல் நடத்தலாமா என்ற விடயத்திலுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாக சட்ட முதுமானி வை.எல்.எஸ்.ஹமீட் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை.

உப சரத்தான் 70(3) இன் (SC 509/98) ஆம் எனும் இந்த உபசரத்து என்ன கூறுகின்றது?

அதாவது 70(1) இல் (4/1/2) நாலரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது, (2/3 ஆல் வேண்டுகோள் விடுத்தாலேயொழிய)

மேற்படி உபசரத்தினன்  proviso(i)  இல் (பாராளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்படுகின்றபோது) பிரகடனத்தின் மூலம் பாராளுமன்றத்தை ஒத்திவைத்த பிரகடனத்தில் குறிப்பிட்ட திகதிக்கு முன்னராக (முதல் மூன்று நாட்கள் தவிர்த்து) கூட்டலாம். அல்லது

(ii) இந்த சரத்தின் விதிகளுக்கமைய கலைக்கலாம் என்று கூறுகின்றது. இங்கு கவனிக்க வேண்டியது சரத்து 33(2) (c) ஜனாதிபதிக்கு கலைக்க அதிகாரம் இருக்கின்றது என்கிறது. 62(2) ஐந்து வருடம் முடிவதற்கு முன் கலைக்க முடியும் என்கிறது. ஆனால் அதனைச் செய்வது அதாவது கலைப்பது 70(3) proviso (11) இன் படியாகும். இதன்படி கலைக்கும் போது 70 இல் உள்ள விதிமுறைக்குட்பட்டு கலைக்க வேண்டும் என்கிறது.

70(1) அந்த விதிமுறைகளைச் சொல்கிறது. அதுதான் 4 ½ நாலரை வருடங்களுக்கு கலைக்க முடியாதென்பது.

எனவே, இங்கு மேற்படி உபசரத்தை வர்த்தமானியில் குறிப்பிடாமல் மூடி மறைத்ததால் சட்டத்தின் பார்வையில் பாராளுமன்றம் கலைக்கப்படவில்லை என்றே கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி கலைத்ததாக சொல்ல வேண்டுமோ, அந்த சரத்து குறிப்பிடப்படவில்லை.

மட்டுமல்ல, தற்போது கலைக்க அதிகாரம் இல்லாமல் கலைத்ததனால் அந்தவகையிலும் கலைத்ததாகக் கொள்ள முடியாது. ஆனால் இதைக் கூறுகின்ற அதிகாரம் நீதிமன்றத்துக்கு மாத்திரமே இருக்கின்றது.

கருணாதிலக்க எதிர் தயானந்த திசாநாயக்க (SC 509/98) என்ற முன்னாள் தேர்தல் ஆணையாளருக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சுருக்கமான இரண்டு விடயங்கள்:

ஒன்று:- சட்டவிரோதமான உத்தரவு வழங்கப்படு கின்றபோது  அதற்குக் கட்டுப்பட்டால் அது அடிப்படை உரிமையைப் பாதிக்கும். அதாவது கட்டுப்படக்கூடாது.

இரண்டு :- அந்த உத்தரவின் சட்டத்தன்மை தொடர்பாக சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை மூலம் (through appropriate legal proceedings)  நீதிமன்றத்திலிருந்து உத்தரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே தேர்தல் நடத்துவதற்கான உத்தரவு சட்ட விரோதமானது என்பது தெளிவு. எனவே அதன்படி தேர்தல் ஆணைக்குழு செயற்பட முடியாது. அதாவது தேர்தல் நடத்த முடியாது.

இவ்வுத்தரவு சட்டவிரோமானதுதானா? என்பதில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம். ஆனால் இங்கு ஒரு சிறிய பிரச்சினை இருக்கின்றது.

அதாவது பொருத்தமான சட்ட நடவடிக்கையினூடாக (appropriate legal proceedings) தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்தை நாடலாம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர அப்பொருத்தமான சட்ட நடவடிக்கை என்ன? என்று அத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. எனவே அப்பொருத்தமான நடவடிக்கை என்ன? என்பதை சட்டமா அதிபர் திணைக்களமே தீர்மானிக்க வேண்டும்.

இதை வைத்து ஏதும் தாமதப்படுத்தல் நடக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனாலும் மற்றையவர்கள் வழக்குத் தொடுத்து தேர்தல் நடத்துவதற்குகெதிராக வழக்கு முடியும் வரை தடையுத்தரவு பெறலாம்.

குறிப்பு:- பாராளுமன்றம் கலையும் போது இருந்த அமைச்சரவை தேர்தல் முடியும் வரை காபந்து அமைச்சரவையாக இயங்கும்

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்