தொடரை கைப்பற்றின மேற்கிந்தியத்தீவுகள் மற்றும இலங்கை மகளிர் அணி

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் மேலும்
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற ; ‘ஏ’ பிரிவில் உள்ள நடப்பு சம்பியனான மேற்கிந்தியதீவுகள் அணி தென் ஆபிரிக்காவுடன் போட்டியிட்ட நிலையில் மேற்கிந்தியதீவுகள் அணி அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுதாடிய மேற்கிந்தியதீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்து 108 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 18.4 ஓவர்களில் 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் தோல்வியடைந்துள்ளது.

குறித்த இதே வேளை இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் இலங்கை அணி 25 ஓட்ட விதியாசத்தில் பங்களாதேசினை வென்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதனையடுத்து 98 வெற்றி இலக்காக நிhணயிக்கப்பட்ட போதும் பங்களாதேஸ் அணி 72 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்