செஸ் சம்பியனை திக்குமுக்காடச்செய்த சிறுவன்!

14 வயது சிறுவன் ஒருவர் தனது திறமையான ஆட்டத்தால் முன்னாள் உலக செஸ் சாம்பியன் ஆனந்தை திக்குமுக்காட வைத்துள்ளார்.
கேரளாவின் திரிச்சூர் பகுதியை சேர்ந்த 14 வயது நிஹால் சரின் என்னும் சிறுவன் ஒருவரே இவ்வாறான சாதனையை அடைந்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய விரைவு சேஸ் போட்டிகளின் 8-வது சுற்றில் ஆனந்துடன் நிஹால் சமனில் பூட்டியுள்ளார்.

மட்டுமின்றி செஸ் தொடர்பில் பல்வேறு சூட்சுமங்களையும் ஆனந்த் கற்றுத்தந்ததாக நிஹால் தெரிவித்துள்ளார்.

இளையோருக்கான உலக செஸ் போட்டியில் தங்கம் வென்றுள்ள நிஹால், 14 வயதுக்கு உட்பட்டவர்களில் முதல் நிலை வீரர் என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்