கஜா புயல் பீதி! வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை….!!

கஜா சூறாவளி காரணமாக இன்றைய தினம் வட மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயலின் தாக்கம் யாழ், முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டு வருகின்றதுடன் தமிழகத்தில் தற்பொழுது பெரும் பாதிப்புக்களை கஜா புயல் ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்கள் முடிந்தவரை வெளியிடங்களுக்கு செல்வதனை குறைக்குமாறு  மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட வானிலை நிலைய ஆய்வாளருமான சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்