ஐபிஎல் இல் பங்குபற்றுவதற்கு அவுஸ்ரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் அவுஸ்ரேலிய அணி வீரர்கள் பங்குபற்ற வதற்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் குறித்த போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விடுத் துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த வருடம் மே 30-ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே ஐபிஎல் போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ஐபிஎல் போட்டி யில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்பதனாலேயே அவர்கள் குறித்த போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என குறித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை நடப்பு உலகக் கிண்ண சம்பியன் என்பதால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பை போட்டிதான் முக்கியம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கருதுவதாகவும் இதனால் உலகக் கிண்ணப் போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 வீரர்களும் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்