மாவீரர் தினத்தன்று தவணை பரீட்சைகளை ஒத்திவைக்குக – ஆளுநர் ரெஜினால்ட் குரேயிடம் முன்வைத்த கோரிக்கை!

மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படும் தினமான எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கபப்பட்டுள்ளது.

மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம், மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், குழப்பங்கள் விளைவிக்கப்படக் கூடும் என்ற காரணத்தினால் அன்றைய தினம் நடைபெறும் தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் திட்டமிட்டுள்ளதனால் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பில் பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது அதிகளவான பாடசாலை மாணவ மாணவியர் எதிர்வரும் 27ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.

போரில் உயிர் நீத்த தங்களது சொந்தங்களை நினைவு கூர்வதில் பிழையில்லை என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
இதனடிப்படையிலேயே அவருக்கு இவ்வாறானதொரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்