இலங்கைக்கான நிதியுதவி நிறுத்தம்! சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!!

இலங்கைக்கான நிதியுதவியினை நிறுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை நாங்கள் நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்த வெளியிட்டுள்ள இலங்கை நிதி விவககரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் கருத்து வெளியிடுகையில் குறித்த விடயம் தொடர்பில் சர்வதெச நாணய நிதியம் எவ்வித தகவல்களும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

குறித்த இதேவேளையில் 2016 ம் ஆண்டு சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் 1.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்