பாடசாலை மாணவர்களது சிகை அலங்காரம் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் சிகை அலங்காரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை என வவுனியா நகரில் சமூக ஆர்வலர்கள் விசளம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் கருத்து வெளியிடுகையில் வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் ஆண் மாணவர்களின் சிகை அலங்காரம் மற்றும் தாடி வளர்த்து வருதல் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லை என தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக பாடசாலை நடைமுறைகளுக்கு பொருத்தமில்லாத முறையில் பாடசாலை மாணவர்கள் வருவதனை அவதானிக்கமுடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண கல்வி அமைச்சு மாணவர்களின் சிகை அலங்காரம் மற்றும் உடை தொடர்பாக சுற்றுநிருபங்களை வெளியிட்டுள்ள நிலையிலும் அவை சிகை அலங்கரிப்பு நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மாணவர்கள் இவ்வாறு பாடசாலைகளுக்கு அனுமதிப்பது தொடர்பாக அதிபர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்