95 வீதமான க.பொ.த சாதாரண தர பரீட்சை அட்டைகள் தயாரிக்கும் பணி பூர்த்தி

எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளில் 95 வீதமான பரீட்சாத்திகளின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவிக்கையில் இதுவரை மூன்று இலட்சத்து 95 ஆயிரம் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் மூன்று இலட்சத்து 92 ஆயிரம் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை பரீட்சார்த்திகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின், இது தொடர்பில் உடனடியாக தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்