நந்திக்கடலில் 3300 V அதி உயர் மின்சாரம்? அச்சத்தில் நடுங்கும் மீனவர்கள்!

நந்திக்கடலில் 3300 ஏ அதி உயர் மின்சாரம் கடத்தப்படுவதாக தெரிவித்து குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், இன்று காலை, தூண்டில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரின் தூண்டில் அதி உயர் மின்கம்பியில் சிக்கியுள்ளது.

இவ்வாறு சிக்கிய தூண்டிலின் தங்கூசி நூல் அதி உயர் மின்கம்பியில் சிக்கி நந்திக்கடல் நீருடன் தொடர்புபட்டுள்ளது.

இதனால் தூண்டில் நூலில் ஏற்படும் ஈரத்தன்மையூடாக அதி உயர் மின்சாரம் நந்திக்கடலில் கடத்தப்படலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்