பலபிட்டிய பிரதேச சபையில் ஏற்பட்ட கலவரம்!

பலபிட்டிய பிரதேச சபையில் இன்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கருப்பு பட்டி அணிந்து சபைக்கு வந்தமை காரணமாக இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதன்போது பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களும் கருப்பு பட்டி அணிந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமாக செயற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பின்னர் சபாநாயகர் கரு ஜயசூரியவே சட்டவிரோதமாக செயற்படுவதாக கூறி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்